×

தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சரிபார்ப்பு பணி துவக்கம்

 

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள ஆர்டிஇ, ஏசிடி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இலவச சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் சரி பார்க்கும் முகாம் மதுரையில் துவங்கியது. மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு ஏப்.20 முதல் மே 18ம் தேதி வரை மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா ஆலோசனையின்படி இதுவரை விண்ணப்பிக்கப்பட்ட, விண்ணப்பங்கள் சரிபார்க்கும் முகாம் மதுரை சர்வேயர் காலனி மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கோகிலா மேற்பார்வையில் நடந்த இம்முகாமிற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் கார்மேகம் முன்னிலை வகித்தார். 8 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன.

இறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், விரைவில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில், அனைத்து வட்டார அளவிலான ஆர்டிஇ ஆசிரியர் பயிற்றுனர்கள், தேர்வு செய்யப்பட்ட தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், தனியார் பள்ளிகள் அலுவலக கண்காணிப்பாளர் அண்ணாமலை, உதவியாளர்கள் ராஜேஷ் மற்றும் ஜான் கனகலிங்கம், எமிஸ் ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி, மதுரை மாவட்ட தகவல் சாதனா அலுவலர் செந்தில்வேல் குமரன், மகாத்மா பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர் கலந்துகொண்டு, விண்ணப்பங்களை சரிபார்த்தனர்.

The post தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சரிபார்ப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,RTE ,ACD ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!!