×

டெங்கு விழிப்புணர்வு

 

பந்தலூர்: தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மருத்துவ அலுவலர் கவிமதி தலைமை தாங்கி டெங்கு பாதிப்பு மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். சுகாதார ஆய்வாளர் மோகன் டெங்கு பரவும் நிலைகள் கொசுக்கள் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதுபோல், அய்யங்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post டெங்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Bandalur ,National Dengue Day ,Kolappalli ,Government ,Primary Health Center.… ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி...