×

நெல்லை சந்திப்பு ஆர்எம்எஸ் அலுவலகத்தை இளைஞர் பெருமன்றம் மாதர் சம்மேளனம் முற்றுகை

நெல்லை, மே 17: பாஜ எம்.பி., பிரட்ஜ் பூஷன் சரண்–சிங்கை கண்–டித்து நெல்லை சந்–திப்பு ரயில்வே மெயில் சர்–வீஸ் அலு–வ–லத்தை முற்று–கை–யிட்–ட– அனைத்–திந்–திய இளை–ஞர் பெரு–மன்–றம், இந்–திய தேசிய மாதர் சம்–மே–ள–னத்–தின் 15 பெண்–கள் உள்–ளிட்ட 50 பேரை போலீ–சார் கைது செய்–த–னர். பாஜ எம்பி பிரட்ஜ் பூஷன் சரண்–சிங் மல்–யுத்த வீராங்–க–னை–க–ளி–டம் பாலி–யல் சீண்–ட–லில் ஈடு–பட்ட விவ–கா–ரம் நாடு–மு–ழு–வ–தும் கடும் அதிர்–வ–லை–களை ஏற்–ப–டுத்தி உள்–ளது. இச்–சம்–ப–வத்தை கண்–டித்–தும், அவர் மீது நட–வ–டிக்கை எடுக்க வலி–யு–றுத்–தி–யும் நெல்லை சந்–திப்பு ரயில் நிலை–யம் ஆர்–எம்–எஸ் அலு–வ–ல–கத்தை அனைத்–திந்–திய இளை–ஞர் பெரு–மன்–றம், இந்–திய தேசிய மாதர் சம்–மே–ள–னம் சார்–பில் முற்–று–கை–யி–டும் போராட்–டம் நேற்று நடந்–தது. போராட்–டத்–திற்கு இந்–திய தேசிய மாதர் சம்–மே–ள–னத்–தின் மாவட்–டச் செய–லா–ளர் சபீ–யாள், அனைத்–திந்–திய இளை–ஞர் பெரு–மன்–றத்–தின் மாவட்–டச் செய–லா–ளர் சுரேஷ் தலைமை வகித்–த–னர். முன்–னிலை வகித்த இந்–திய கம்–யூ–னிஸ்ட் கட்–சி–யின் நெல்லை மாவட்–டச் செய–லா–ளர் லட்–சு–ம–ணன், ஏஐ–டி–யுசி நெல்லை மாவட்ட பொதுச் செய–லா–ளர் சடை–யப்–பன் உள்–ளிட்–டோர் பாலி–யல் சீண்–ட–லில் ஈடு–பட்ட பா.ஜ. எம்–பியை கண்–டித்து கோஷங்–கள் எழுப்–பி–ய–தோடு உட–ன–டி–யாக அவரை கைது செய்ய வலி–யு–றுத்–தி–னர்.

தொடர்ந்து நடந்த முற்–று–கைப் போராட்–டத்–தில் இளை–ஞர் பெரு–மன்–றம் சார்–பில் பாலன், முத்–து–கி–ருஷ்–ணன், நவ–ராஜ் மோசஸ், சந்–தா–ன–முத்து, இந்–திய தேசிய மாதர் சம்–மே–ள–னம் சார்–பில் சிவ–காமி, மும்–தாஜ், பாத்–திமா, சாந்தி, மேரி, பார்–வதி, திவான் பீவி, செய்–ய–து–அலி உள்–ளிட்ட பலர் பங்–கேற்–ற–னர். இதை–ய–டுத்து முற்–று–கைப் போராட்–டத்–தில் ஈடு–பட்ட 15 பெண்–கள் உள்–ளிட்ட 50 பேரை போலீ–சார் கைது செய்–த–னர். இதே போல் இந்த கோரிக்–கையை வலி–யு–றுத்தி நாடு முழு–வ–தும் ஒன்–றிய அரசு அலு–வ–ல–கங்–களை முற்–று–கை–யி–டும் போராட்–டம் நடந்–தது குறிப்–பி–டத்–தக்–கது. இதை–யொட்டி நெல்லை சந்–திப்பு ரயில் நிலை–யம் பகு–தி–யில் மாந–கர போலீஸ் துணை கமி–ஷ–னர் (மேற்கு) சர–வ–ண–கு–மார் தலை–மை–யில் பலத்த போலீஸ் பாது–காப்பு போடப்–பட்–டி–ருந்தது.

The post நெல்லை சந்திப்பு ஆர்எம்எஸ் அலுவலகத்தை இளைஞர் பெருமன்றம் மாதர் சம்மேளனம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Youth Forum ,Matar Sammelanam ,Nellai Junction RMS ,Nellai ,BJP ,Bridge ,Bhushan Saran-Singh ,Nellai Junction Railway Mail Service Office ,Youth Council of Mathar Sammelanam ,Dinakaran ,
× RELATED மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்