×

நாசரேத் ரயில் நிலையத்தில் காட்சிப்பொருளான தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரம்

நாச–ரேத், மே 17: நாச–ரேத் ரயில் நிலை–யத்–தில் காட்–சிப்–பொ–ரு–ளான தானி–யங்கி டிக்–கெட் விற்–பனை இயந்–தி–ரத்தை செயல்–ப–டுத்த நட–வ–டிக்கை எடுக்க வேண்–டு–மென பய–ணி–கள் கோரிக்கை விடுத்–துள்–ள–னர்.
நாச–ரேத் ரயில் நிலை–யத்–தில் சில மாதங்–களுக்கு முன்பு பய–ணி–க–ளின் பயன்–பாட்–டிற்கு தானி–யங்கி டிக்–கெட் விற்–பனை இயந்–தி–ரம் (ஏடி–வி–எம்) வைக்–கப்–பட்–டது. இந்த ஏடி–வி–எம் என்–பது ஸ்மார்ட் டச் அடிப்–ப–டை–யி–லான டிக்–கெட் விற்–பனை இயந்–தி–ர–மா–கும். இது டிக்–கெட் கவுன்–டர்–க–ளில் பய–ணி–கள் அதி–க–மாக இருக்–கும் சூழ்–நி–லை–யில் வரி–சை–க–ளைக் குறைக்க ரயில் பய–ணி–களுக்கு பய–ன–ளிக்–கும் வகை–யில் இந்–திய ரயில்–வே–யின் சார்–பில் முக்–கிய ரயில் நிலை–யங்–க–ளில் அறி–மு–கப்–ப–டுத்–தப்–பட்–டது. இத–னால் பய–ணி–கள் பெரி–தும் பயன்–பெற்று வரு–கின்–ற–னர்.

நாச–ரேத் ரயில் நிலை–யத்–தில் ஒரே ஒரு டிக்–கெட் கவுன்–டர்–தான் உள்–ளது. இதில் சில நேரங்–க–ளில் முன்–ப–திவு டிக்–கெட் எடுக்க வரும் பய–ணி–கள் மற்–றும் முன்–ப–தி–வில்லா டிக்–கெட் எடுக்க வரும் பய–ணி–கள் என அதி–க–மா–னோர் வரி–சை–யில் காத்–தி–ருந்து டிக்–கெட் எடுக்க வேண்–டிய சூழ்–நிலை ஏற்–பட்டு வரு–கி–றது. இந்–நி–லை–யில் கடந்த சில மாதங்–களுக்கு முன்பு நாச–ரேத் ரயில் நிலை–யத்–தி–லும் புதி–தாக ஏடி–வி–எம் இயந்–தி–ரம் வைக்–கப்–பட்–டது. இந்த இயந்–தி–ரம் கடந்த சில மாதங்–க–ளாக செயல்–ப–டா–மல் காட்–சிப்–பொ–ரு–ளாக உள்–ளது. இது–கு–றித்து ரயில் பய–ணி–க–ளான பிர–கா–ச–பு–ரம் ஜேம்ஸ், நாச–ரேத் ஆசி–ரி–யர் பிரின்ஸ் ஆகி–யோர் கூறு–கை–யில், இந்த இயந்–தி–ரம் செயல்–ப–டும்–போது கூட்–ட–மான நேரங்–க–ளில் ரயில் பய–ணி–களுக்கு பய–னுள்–ள–தாக இருந்–தது. தற்–போது சில நாட்–க–ளாக இந்த இயந்–தி–ரம் செயல்–ப–டா–த–தால் ரயில் பய–ணி–கள் மிகுந்த சிர–மத்–திற்–குள்–ளாகி வரு–கின்–ற–னர். இத–னால் கூட்–டம் அதி–க–மான நேரங்–க–ளில் டிக்–கெட் எடுக்க முடி–யா–மல் பய–ணி–கள் தவிக்–கின்–ற–னர். ரயில்வே நிர்–வா–கம் உட–ன–டி–யாக நட–வ–டிக்கை எடுத்து ஏடி–வி–எம் இயந்–தி–ரத்தை பழுது நீக்கி செயல்–பாட்–டுக்கு கொண்டு வேண்–டும், என்–ற–னர்.

The post நாசரேத் ரயில் நிலையத்தில் காட்சிப்பொருளான தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரம் appeared first on Dinakaran.

Tags : Nazareth train station ,Nasarath ,Nasarath railway station ,Nazareth Railway Station ,Dinakaran ,
× RELATED நசரத்பேட்டை – சிக்கராயபுரம் வரை...