×

1012 அரசு பள்–ளி–களுக்கு பாடப்–புத்–த–கம் அனுப்–பும் பணி துவக்–கம்

நாமக்–கல், மே 17: நாமக்–கல் மாவட்–டத்–தில் உள்ள 1,012 அரசு பள்–ளி–களுக்–கும் இல–வச பாடப்–புத்–த–கம் அனுப்–பும் பணி துவங்–கி–யுள்–ளது. பள்ளி திறக்–கும் முதல் நாளில் மாண–வர்–களுக்கு விநி–யோ–கிக்க ஏற்–பாடு செய்–யப்–பட்–டுள்–ளது. நாமக்–கல் மாவட்–டத்–தில் 94 அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–கள், 67 அரசு உயர்–நி–லைப்–பள்–ளி–கள், 695 துவக்–கப்–பள்–ளி–கள், 165 நடு–நி–லைப்–பள்–ளி–கள் என மொத்–தம் 1012 பள்–ளி–கள் செயல்–பட்டு வரு–கி–றது. அனைத்து பள்–ளி–க–ளி–லும் இந்த கல்–வி–யாண்–டுக்–கான மாணவ, மாண–வி–கள் சேர்க்கை நடந்து வரு–கி–றது. மாவட்–டத்–தில் உள்ள அரசு பள்–ளி–க–ளில் கற்–றல் கற்–பித்–தல் திறன் மேம்–ப–டுத்–தப்–பட்–டுள்–ளது. தனி–யார் பள்–ளிக்கு இணை–யான பல்–வேறு வச–தி–கள், மாவட்–டத்–தில் உள்ள அரசு பள்–ளி–க–ளில் செய்து கொடுக்–கப்–பட்–டுள்–ளது.

ஆசி–ரிய, ஆசி–ரி–யை–கள் மற்–றும் மாணவ, மாண–வி–க–ளின் வீடு–தே–டிச் சென்று மாண–வர்–களை அரசு பள்–ளிக்கு வரும்–படி அழைத்து வரு–கி–றார்–கள். தற்–போது பள்–ளி–களுக்கு கோடை விடு–முறை அளிக்–கப்–பட்–டுள்–ளது. வரும் ஜூன் முதல் வாரத்–தில் அனைத்து பள்–ளி–களும் திறக்–கப்–ப–டு–கி–றது. தமி–ழக அர–சின் பள்–ளி–கல்–வித்–துறை சர்–பில், மாணவ, மாண–வி–ய–ருக்கு ஆண்–டு–தோ–றும் இல–வச பாடப்–புத்–த–கங்–கள் வழங்–கப்–பட்டு வரு–கி–றது. மாவட்–டத்–தில் உள்ள உயர்–நிலை மற்–றும் மேல்–நி–லைப்–பள்–ளி–களுக்கு, மாவட்ட கல்வி அலு–வ–ல–கத்–தில் இருந்–தும் (இடை–நிலை) இருந்–தும், துவக்க மற்–றும் நடு–நி–லைப்–பள்–ளி–களுக்கு மாவட்ட கல்வி அலு–வ–ல–கம் (தொடக்–க–கல்வி) மூல–மும், பள்–ளி–களுக்கு பாடப்–புத்–த–கம் அனுப்–பி–வைக்–கும் பணி துவங்–கி–யுள்–ளது.

இந்த கல்வி ஆண்–டுக்கு தேவை–யான பாடப்–புத்–த–கம், ஏற்–க–னவே தமிழ்–நாடு அர–சின் பாட–நூல் கழ–கத்–துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலு–வ–ல–கம் மூலம் தெரி–விக்–கப்–பட்–டி–ருந்–தது. அதன்–படி, கடந்த ஒரு மாத–மாக பள்–ளி–களுக்கு தேவை–யான பாடப்–புத்–த–கங்–கள் மாவட்ட கல்வி அலு–வ–ல–கங்–களுக்கு பல்–வேறு நக–ரங்–க–ளில் உள்ள அச்–ச–கத்–தில் இருந்து அச்–சி–டப்–பட்டு வந்து சேர்ந்–தது. இந்த பாடப்–புத்–த–கங்–கள் கடந்த 2 நாட்–க–ளாக மாவட்ட கல்வி அலு–வ–ல–கங்–க–ளில் இருந்து, அந்–தந்த பள்–ளி–களுக்கு வாக–னங்–க–ளில் அனுப்–பி–வைக்–கப்–பட்டு வரு–கி–றது. அந்–தந்த பள்ளி தலைமை ஆசி–ரி–யர்–கள் மற்–றும் பொறுப்பு ஆசி–ரி–யர்–கள், மாவட்ட கல்வி அலு–வ–ல–கத்–துக்கு நேரில் வந்து பாடப்–புத்–த–கங்–களை பெற்று செல்–கி–றார்–கள்.

மாவட்–டத்–தில் உள்ள அரசு உயர்–நிலை மற்–றும் மேல்–நி–லைப்–பள்–ளி–களுக்கு, சுமார் 81 ஆயி–ரம் பாடப்–புத்–த–கங்–கள் அனுப்பி வைக்–கப்–பட்டு உள்–ளது. இது–போல தொடக்க மற்–றும் நடு–நி–லைப்–பள்–ளி–களுக்கு தேவை–யான பாடப்–புத்–த–கங்–கள், நாமக்–கல்–லில் உள்ள மாவட்ட கல்வி அலு–வ–ல–கம் (தொடக்–கப்–பள்–ளி–கள்) மூலம், அந்–தந்த வட்–டார கல்வி அல–வ–ல–கங்–களுக்கு பிரித்து அனுப்பி வைக்–கப்–ப–டு–கி–றது. பின்–னர் அங்–கி–ருந்து, அந்–தந்த வட்–டா–ரங்–க–ளில் உள்ள அரசு பள்–ளி–களுக்கு, புத்–த–கங்–கள் அனுப்–பி–வைக்–கும் பணி நடந்து வரு–கி–றது. இந்த வார இறு–திக்–குள் மாவட்–டத்–தில் உள்ள அனைத்து பள்–ளி–களுக்–கும் பாடப்–புத்–த–கங்–கள் சென்று சேர்ந்து விடும். கோடை விடு–மு–றைக்கு பின் பள்–ளி–கள் திறக்–கும் முதல் நாளில் அனைத்து மாணவ, மாண–வி–களுக்கு புத்–த–கங்–கள் ஆசி–ரி–யர்–கள் மூலம் தரப்–ப–டும் என கல்–வித்–துறை அதி–கா–ரி–கள் தெரி–வித்–த–னர்.

The post 1012 அரசு பள்–ளி–களுக்கு பாடப்–புத்–த–கம் அனுப்–பும் பணி துவக்–கம் appeared first on Dinakaran.

Tags : Namak-Kal ,Govt ,Dinakaran ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...