×

நாமக்கல் பகுதியில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

நாமக்–கல், மே 17: நாமக்–கல் கால்–நடை மருத்–து–வக் கல்–லூரி மற்–றும் ஆராய்ச்சி நிலை–யம் வெளி–யிட்–டுள்ள வானிலை அறிக்கை விப–ரம்: நாமக்–கல் மற்–றும் அதன் சுற்–றுப்–புற பகு–தி–யில், அடுத்த 3 நாட்–கள் வானம் லேசான மேக–மூட்–டத்–து–டன் காணப்–ப–டும். இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளை(18ம் தேதி), 19ம் தேதி–க–ளில் தலா 2 மி.மீட்–டர் மழைக்கு வாய்ப்பு உள்–ளது. வெப்–ப–நிலை அதி–க–பட்–ச–மாக 102.2 டிகி–ரி–யா–க–வும், குறைந்–த–பட்–ச–மாக 75.2 டிகி–ரி–யா–க–வும் இருக்–கும். காற்று மணிக்கு முறையே 8 கி.மீ வேகத்–தில் தெற்கு திசை–யில் இருந்து வீசும். காற்–றின் ஈரப்–ப–தம் குறைந்–த–பட்–சம் 20 சத–வீ–தம், அதி–க–பட்–சம் 70 சத–வீ–த–மாக இருக்–கும்.

கோழிப்–பண்–ணை–யா–ளர்–கள் கோடை–கால பரா–ம–ரிப்பு முறை–களை தொடர்ந்து கடை–பி–டிக்க வேண்–டும். கோழி–க–ளில் தீவன எடுப்பு மிக–வும் குறைந்து உள்–ளது. அதன் கார–ண–மாக முட்டை உற்–பத்–தி–யும், முட்–டை–யின் எடை–யும் குறைந்–துள்–ளது. சமீ–பத்–தில் பெய்த மழை–யின் கார–ண–மாக, குறைந்த வெப்ப அள–வு–கள் மீண்–டும் உயர தொடங்–கி–யுள்–ளது. எனவே, வரும் நாட்–க–ளில் கோடை காலத்–திற்–கான தீவன மேலாண்–மையை கடை–பி–டிக்க வேண்–டும். தீவ–னத்–தில் அமீனோ அமி–லங்–கள் குறிப்–பாக மித்–தி–யோ–னின் மற்–றும் லைசின் சேர்த்–தல், தாவர எண்–ணெய் கொண்டு எரி–சக்–தி–யின் அளவை உயர்த்–து–தல், எலக்ட்–ரோ–லைட்ஸ் உப்–புக்–கள் மற்–றும் வைட்–ட–மின் சி போன்–ற–வற்றை கலந்து தர வேண்–டும். இவ்–வாறு வானிலை அறிக்–கை–யில் தெரி–விக்–கப்–பட்–டுள்–ளது.

The post நாமக்கல் பகுதியில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namak ,Kal ,Nadai ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...