×

கூட்டமைப்புகளுக்கு ₹1,747 லட்சம் கடனுதவி

நாமக்–கல், மே 17: நாமக்–கல் மாவட்ட கலெக்–டர் ஸ்ரேயா சிங் வெளி–யிட்–டுள்ள செய்–திக்–கு–றிப்–பில் கூறி–யுள்–ள–தா–வது: தமிழ்–நாட்–டில் பெண்–க–ளின் வாழ்க்கை தரம் உய–ர–வும், பொரு–ளா–தார ரீதி–யில் பெண்–கள் முன்–னே–ற–வும், தமிழ்–நாடு அர–சா–னது, தமிழ்–நாடு மாநில ஊரக வாழ்–வ–தார இயக்–கத்–தின் மூலம், மக–ளிர் சுய–உ–த–விக் குழுக்–களுக்கு பல்–வேறு கட–னு–த–வி–கள் வழங்கி வரு–கி–றது. அந்த வகை–யில் தமிழ்–நாடு முத–ல–மைச்–சர் பெண்–க–ளின் முன்–னேற்–றத்தை கருத்–தில்–கொண்டு, கடந்த 14.12.2021 அன்று தமிழ்–நாடு முழு–வ–தும் 58,463 மக–ளிர் சுய–உ–த–விக் குழுக்–களை சேர்ந்த 7,56,142 உறுப்–பி–னர்–களுக்கு ₹2,749.85 கோடி மதிப்–பி–லான கடன் உத–வி–களை வழங்கி, தொடங்கி வைத்–தார்.

அதன் தொடர்ச்–சி–யாக திருச்சி மாவட்–டத்–தி–லும் மக–ளிர் சுய–உ–த–விக் குழுக்–களுக்கு கட–னு–த–வி–கள் வழங்–கும் திட்–டத்–தின் கீழ், மக–ளிர் குழு உறுப்–பி–னர்–களுக்கு கட–னு–த–வி–களை வழங்–கி–னார். தொடர்ந்து நாமக்–கல் மாவட்–டத்–தில் மே 2021 – 2022 மற்–றும் 2022 – 2023ம் ஆண்–டில் தமிழ்–நாடு மாநில ஊரக வாழ்–வா–தார இயக்–கத்–தின் கீழ், 1,203 புதிய மக–ளிர் சுய–உ–த–விக் குழு அமைக்–கப்–பட்–டுள்–ளது. சுழல்–நிதி கட–னாக 575 மக–ளிர் சுய–உ–த–விக் குழுக்–களுக்கு தலா ₹15 ஆயி–ரம் வீதம் ₹86.25 லட்–சம் கட–னு–த–வி–கள் வழங்–கப்–பட்–டுள்–ளது. சமு–தாய முத–லீட்டு நிதி–யாக 936 குழுக்–களுக்கு ₹1.08 கோடி கட–னு–த–வி–கள் வழங்–கப்–பட்–டுள்–ளது.

நலி–வுற்ற தன்மை குறைப்பு நிதி–யின் கீழ், 172 நபர்–களுக்கு ₹43 லட்–சம் கட–னு–த–வி–கள் வழங்–கப்–பட்–டுள்–ளது. வங்–கிக்–க–டன் இணைப்பு நிதி–யாக 19,832 சுய–உ–த–விக் குழுக்–களுக்கு ₹1,157.82 கோடி வங்–கிக்–க–டன் பெற்று தரப்–பட்–டுள்–ளது. வங்கி பெருங்–க–டன் வழங்–கு–வ–தில் இது–வரை 55 ஊராட்சி அள–வி–லான கூட்–ட–மைப்–பு–களுக்கு ₹1,747 லட்–சம் மதிப்–பி–லான கட–னு–த–வி–கள் வழங்–கப்–பட்–டுள்–ளது. மேலும் மாவட்–டத்–தில் தமிழ் நாடு நகர்–புற வாழ்–வா–தார இயக்–கத்–தின் மூலம், புதி–ய–தாக நகர்–புற பகு–தி–க–ளில் 1,315 மக–ளிர் சுய–உ–த–விக் குழுக்–கள் அமைக்–கப்–பட்டு செயல் பட்டு வரு–கி–றது. மக–ளிர் சுய–உ–த–விக்–குழு உறுப்–பி–னர்–களை ஊக்–கு–விக்–கும் வகை–யில், மக–ளிர் குழு உறுப்–பி–னர்–கள் சுய–தொ–ழில் தொடங்க ஏது–வாக கட–னு–த–வி–கள் தமிழ்–நாடு மாநில ஊரக வாழ்–வா–தார இயக்–கத்–தின் மூலம் வழங்–கப்–பட்டு வரு–கி–றது. இவ்–வாறு கலெக்–டர் தெரி–வித்–துள்–ளார்.

The post கூட்டமைப்புகளுக்கு ₹1,747 லட்சம் கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Namak-Kal ,District ,Collector ,Shreya Singh ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...