×

அதிமுக பெண் கவுன்சிலர் தற்கொலை

கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே அதிமு‌க ஒன்றிய பெண் கவுன்சிலர் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே பாலகவுண்டன்பட்டி சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி தீபா (33). இவர் சாணார்பட்டி ஒன்றியம் வி.டி.பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். தீபா குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்தவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த சாணார்பட்டி போலீசார், தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post அதிமுக பெண் கவுன்சிலர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Gopalpatti ,Chanarpatti ,Dindigul ,Dinakaran ,
× RELATED அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம்