×

இந்தியாவை பாதுகாக்கவும், பாஜவை வீழ்த்தவும் விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் சீதாராம் யெச்சூரி பேட்டி

சென்னை: இந்தியாவை பாதுகாக்கவும், பாஜவை வீழ்த்தவும் விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக பொது செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது. அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் குறித்து சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

சந்திப்புக்கு பின்னர் சீதாராம் யெச்சூரி அளித்த பேட்டி: மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினேன். கர்நாடகா தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலினுடன் விவாதித்தேன். ஒவ்வொரு மாநிலத்திலும் மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மதசார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும். இந்தியாவை பாதுகாக்கவும், பாஜகவை வீழ்த்தவும் விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும். பாஜகவை தோற்கடிப்பதே ஒற்றை இலக்காகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியாவை பாதுகாக்கவும், பாஜவை வீழ்த்தவும் விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் சீதாராம் யெச்சூரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,BJP ,Sitaram Yechury ,CM ,Stalin ,CHENNAI ,Marxist ,Communist ,National General Secretary ,Sitaram ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED வாக்கு சதவீத முரண்பாடு கவலை தருகிறது: சீதாராம் யெச்சூரி