- ஓய்வூதிய வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்
- புது தில்லி
- ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை
- தின மலர்
புதுடெல்லி: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சோதனை அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டில் ஓய்வூதியத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தை நடத்தியது. இதுவரை 7 ஓய்வூதிய சிறப்பு நீதிமன்றங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஓய்வூதியம் தொடர்பான 24,218 வழக்குகளில் 17,235 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிலையில், ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அகில இந்திய அளவிலான சிறப்பு நீதிமன்றத்தை ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங் இன்று தொடங்கி வைக்க இருப்பதாக அத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post ஓய்வூதிய வழக்குகளுக்கு சிறப்பு கோர்ட் appeared first on Dinakaran.
