×

இளம் சிறார் இல்லங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு இளம் சிறார் இல்லங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இளம் சிறார் சட்டத்தின் கீழ் சிறப்பு இல்லம், கூர்நோக்கு இல்லங்களில் நடைபெறும் பணிகளை குழு ஆராயும் என தகவல் வெளியாகியுள்ளது. சிறார் இல்லங்களில் உள்ள குறைகள், உணவு, பணியாளர், பிரச்சனைகள், சட்டவிதிகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இளம் சிறார் இல்லங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஒரு நபர் குழுவை அமைத்துள்ளது. அக்குழு 2015-ம் வருட இளம் சிறார் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் உறைவிட வாசிகளின் நிர்வாகம், உள்கட்டமைப்பு, உடல் நலன் மற்றும் மருத்துவ வசதிகள், பயிற்சி மற்றும் திறன் கட்டமைத்தல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, பணியாளர்கள், அக்கறை கொண்ட நிறுவனங்களின் பங்கு, பின் கவனிப்புப் பிரச்சனைகள், இளம் சிறார் நீதி சட்டம் மற்றும் அதன் விதிகள் குறித்த திருத்தங்கள் இவை பற்றி ஆராயும்படி குழுவை பணித்துள்ளது.

இப்பொருள் குறித்து அக்கறை உள்ளவர்கள், நிறுவனங்கள் விருப்பப்பட்டால் தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் ஒரு நபர் குழு 147, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை – 600004 என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் chandruonjuvenilehome@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என்றும் நேரில் சந்திக்க விரும்புவோர் வேலை நாட்களில் மதியம் 03.00 மணி முதல் 05.00 மணி வரை மேற்கண்ட விலாசத்திற்கு வரலாம் என்று தெரிவித்துள்ளனர்.

 

 

The post இளம் சிறார் இல்லங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Judge ,Santhuru ,Chennai ,The Government of Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்