×

கிச்சன் டிப்ஸ்..!!

 

* ஒருமுறை பொரித்த எண்ணெய்யை மறுபடி பயன்படுத்தும்போது, அதை வடிகட்டிவிட்டு பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை கொஞ்சமாக எண்ணெய்யை பயன்படுத்தி பொரிக்கவும். மீதியை 3 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும்.
* அடுத்தநாள் என்ன சமைக்க போகிறோம் என்பதை ஒருநாள் முன்பே யோசித்து தேவையானதை வாங்கி வைத்துக்கொண்டால், காலையில் சமைக்கும்போது டென்ஷன் இல்லாமல் இருக்கும்.
* முருங்கைக்காயை அதிகமாக வாங்கி வந்துவிட்டால், அப்படியே ப்ரிட்ஜில் வைக்காமல் துண்டுகளாக நறுக்கி ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் நீண்ட நாட்களுக்கு காய்ந்து போகாது.
* குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்துக்கொண்டு சிறிதளவு பாதாம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும். குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
* கறிவேப்பிலையை பிரெஷ்ஷாக வாங்கி, அதை கழுவி, தண்ணீரை வடித்து, ஒரு பேப்பரில் சுருட்டி ஃபிரிட்ஜில் வைத்தால் கொஞ்சநாள் ஆனதும் பொடித்தால் தூளாக வரும். அதை பிசிபெளாபாத், இட்லிபொடியில் சேர்க்கலாம். மேலும், பொடித்த கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கும் பயன்படுத்தலாம்.– பா.பரத்
* சேமியா, ரவை போன்றவற்றை தேவைக்கு வறுத்து வைத்துக் கொண்டால் நிமிஷத்தில் உப்புமா, சேமியா கிச்சடி ஈசியாக தயாரித்துவிடலாம்.
* அசைவம், குருமா போன்றவற்றை சமைக்கும்போது, இஞ்சி, பூண்டு விழுது தேவைப்படும். அதற்கு, அரைகிலோ இஞ்சி, கால் கிலோ பூண்டு இரண்டையும் தோலுரித்து அரைத்து ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது, எடுத்து சமைக்க சுலபமாக இருக்கும்.
* தேங்காய் நிறைய இருந்தால், வில்லைகளாக நறுக்கி ஒரு பாக்கெட்டில் போட்டு ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால், தேவையானபோது எடுத்து சிறிதுநேரம் தண்ணீரில் போட்டுவிட்டு பயன்படுத்தலாம்.
* இஞ்சி டீ குடிப்பவர்கள், இஞ்சியை தினமும் தட்டிக் கொண்டு இருக்காமல் சிறிதளவு இஞ்சியை கொர கொரப்பாக ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக்கொண்டால் தினமும் டீ கொதிக்கும்போது ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துப்போட்டு கொள்ளலாம். அல்லது கேரட் துருவியில் தினம் ஒரு துண்டு துருவிக்கொள்ள சுலபமாக இருக்கும்.
* தோசைமாவை சற்று கூடுதலாக அரைத்து வைத்துக் கொண்டால் அந்த வாரம் முழுவதும் இட்லி, தோசை, ஆப்பம், ஊத்தாப்பம், குழிப்பணியாரம் என செய்து அசத்தலாம். வாரம் முழுவதும் டிபன் டென்ஷன் இருக்காது. அவசரத்துக்கு கை கொடுக்கும்.– பா. கவிதா
* கொதிக்க வைத்த பாலில் நான்கு நெல் மணிகளை போட்டு வைத்தால் சீக்கிரத்தில் பால் கெடாது.
* அன்னாசிப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி மோர்க்குழம்பு செய்யும்போது அதில் போடவும், சுவையாகவும் இருக்கும். உடல் நலத்துக்கும் ஏற்றது.
* உப்பு நீரில் தக்காளிப் பழத்தைப் போட்டு வைத்தால் மூன்று நாள்கள் வரை கெடாது.
* காய்கறிப் பொரியல் மீதமாகி விட்டால், அதை வைத்து ஸ்டப்ட் சப்பாத்தி அல்லது ஸ்டப்ட் தோசை செய்யலாம். மீதமாகிவிட்ட காய்கறிப் பொரியலோடு தேங்காய்த்துருவல் சேர்த்து பூரணமாக்கி காரக் கொழுக்கட்டை செய்யலாம். பொரியலும் வீணாகாது. மாலை நேரத்துக்கு ஸ்நாக்ஸும் ரெடி.
* கோதுமை ரவையை ஒருமணி நேரம் மோரில் ஊற வைத்து, மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
* அரிசி உப்புமாவிற்கு உடைத்த அரிசியை ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசறி மூடி வைத்து, சிறிது நேரம் கழித்து உப்புமா செய்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* பாத்திரங்களில் உள்ளே படிந்துள்ள கரியைப் போக்க சாதம் வடித்த கஞ்சியை சூடாக ஊற்றி சிறிதுநேரம் வைத்திருந்து பாத்திரத்தை தேய்க்க பாத்திரம் பளிச்சிடும். – அமுதா அசோக்ராஜா, திருச்சி.

The post கிச்சன் டிப்ஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...