×

மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க சட்ட அடிப்படையில் ஏரளமான வழிகள் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

மதுரை: வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவி சான்றிதழை திரும்ப வழங்க வேண்டும் என்று மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. பி.எஸ்.சி மாணவியின் சான்றிதழ்களை 10 நாட்களில் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

வாசுதேவநல்லூரை சேர்ந்த பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண் இளநிலை படிப்பை படித்து வந்தார். இந்நிலையில் கொரோனா காலத்தில் தனக்கு திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

தானும் வெளிநாட்டிற்கு செல்ல உள்ளதால் எனக்கு சான்றிதழ்கள் வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சான்றிதழ் வேண்டுமென்றால் ரூ.2 லட்சம் செலுத்திய பிறகு தான் சான்றிதழ்கள் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் மாணவி கல்லூரியில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் ஆனால் சான்றிதழ்களை கொடுக்காமல் வைத்துள்ளதாக மாணவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாணவியின் சான்றிதழ்களை 10 நாட்களில் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவும் கருத்துக்களும் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் கல்வி சான்றை நிறுத்தி வைக்க கல்லூரி நிர்வாகங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார். கட்டணம் தரவில்லை என்பதற்காக சான்றுகளை நிறுத்தி வைக்க கல்லூரி நிர்வாகம் வட்டி தொழில் ஏதும் செய்யவில்லை. கல்விச்சான்று மாணவர்களின் விலை மதிப்புமிக்க சொத்து என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மாணவர்களின் கற்ற கல்வியின் விளைவாக கிடைக்கக்கூடிய சான்றை யாராலும் அபகரிக்க முடியாது. மாணவர்கள் மத்தியில் படிப்பை நிறுத்த முற்பட்டால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க சட்ட அடிப்படையில் ஏரளமான வழிகள் உள்ளது. கல்விச் சான்றுகளை மாணவிக்கு திருப்பி வழங்க வேளாண் கல்லூரி நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க சட்ட அடிப்படையில் ஏரளமான வழிகள் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : Court Madurai ,Madurai ,Vasudevanallur ,Thangapazam College of Agriculture ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...