×

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு: சம்பங்கி பூக்களை 5 ரூபாய்க்கு வாங்க ஆளில்லை!

திண்டுக்கல்: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் அனைத்து வகை பூக்களின் விலையும் சரிந்துள்ளது. ஒரு கிலோ சம்பங்கி பூவை ரூ.5 கூட வாங்க ஆளில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருக்கும் அறிஞர் அண்ணா பூ மார்க்கெட்டிற்கு நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் விளைவிக்க கூடிய பூக்களை கொண்டு வந்து விற்பது வழக்கம். ஆனால், சுப முகூர்த்தம், திருவிழாக்கள் இல்லாத காரணத்தினால் அனைத்து வகை பூக்களின் விலையும் சரிந்து விட்டது.

ரூ.200 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ சம்பங்கி வரத்து அதிகம் காரணமாக ரூ.5 கூட வாங்க ஆளில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மல்லிகைப்பூ கிலோ ரூ.250-க்கும், முல்லை பூ கிலோ ரூ.80-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.15-க்கும், செண்டு மல்லி கிலோ ரூ.20-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.60-க்கும் விற்பனையாகிறது. இதனால் பூ விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நறுமண தொழிற்சாலை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

The post திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு: சம்பங்கி பூக்களை 5 ரூபாய்க்கு வாங்க ஆளில்லை! appeared first on Dinakaran.

Tags : Dindukal ,Thindukal ,
× RELATED கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்,...