×

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஹோண்டாவின் மிட் சைஸ் எலிவேட் எஸ்.யூ.வி. கார் ஜூன் 6-ம் தேதி அறிமுகம்..!!

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஹோண்டாவின் மிட் சைஸ் எலிவேட் எஸ்.யூ.வி. கார் ஜூன் 6-ம் தேதி அறிமுகமாகப்படுத்தப்பட உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் மிட் சைஸ் சிட்டி எஸ்.யூ.வி. மற்றும் அமேஸ் காம்பாக்ட் எஸ்.யூ.வி. கார்களை தொடர்ந்து 3-வது பதிப்பாக மிட் சைஸ் எனப்படும் நடுத்தர அளவிலான எலிவேட் எஸ்.யூ.வி. மடலின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி, கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக கருதப்படும் இந்த மாடலின் விலை ரூ.10.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எலிவேட் மாடல் 360 டிகிரி கேமரா, பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இம்மாத துவக்கத்தில் ஹோண்டா நிறுவனம் பதிய எஸ்யூவி மாடல் பெயரை அறிவித்தது. இதைத் தொடர்ந்து எலிவேட் எஸ்யூவி ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளதை போன்ற என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் ஹைப்ரிட் பவர்டிரெயின், ADAS சூட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

The post பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஹோண்டாவின் மிட் சைஸ் எலிவேட் எஸ்.யூ.வி. கார் ஜூன் 6-ம் தேதி அறிமுகம்..!! appeared first on Dinakaran.

Tags : Honda ,CHENNAI ,Hyundai… ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...