×

திருப்பத்தூர் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் 4-வது நாளாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள நிலையில் மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2 யானைகளை மீண்டும் ஆந்திர வனப்பகுதிக்கு அனுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. திருப்பத்தூர் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்ல பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பத்தூர் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Jalagambara ,Tiruppattur ,Thirupatur ,Jalagampara ,Tirupatur ,
× RELATED சீல்டு கால்வாய் பணிக்கு நிதி ஒதுக்கீடு அவசியம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு