×

நியூசிலாந்தில் தங்கும் விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

வெலிங்டன்: நியூசிலாந்தில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்டு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 100க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு விடுதியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 90க்கும் மேற்பட்டார் தீ விபத்தில் சிக்கி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளதால் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. ஆனால் இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பலியானோருக்கு பிரதம மந்திரி கிறிஸ் ஹாப்கின்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

The post நியூசிலாந்தில் தங்கும் விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Wellington ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்தில் நிலநடுக்கம்