×

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணிநிலைத் திறன் அமைப்பின் கீழ் கூட்டுறவு சங்க செயலாளர்களை பழிவாங்கும் நோக்கில் மண்டல இணைப்பதிவாளர் பணிமாறுதல் செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் செயலாளர் பணி மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்தனர்.

கோரிக்கைளை நிறைவேற்றாதபட்சத்தில் அனைத்து சங்கங்களின் சாவிகளும், பொறுப்புகளும் மண்டல இணைப்பதிவாளரிடம் ஒப்படைத்து விட்டு ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல உள்ளதாக தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் ராகவன், சௌந்தரராஜன், தங்கபாண்டி, மாரியப்பன், அருள்ஜோதி, மலைச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar Collectorate ,Virudhunagar ,Virudhunagar Collector's Office ,District Secretary ,Natarajan ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை