×

பூட்டிய வீட்டில் முதியவர் சடலம்

 

மதுரை: மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பாரதி நகர் கோகுலம் கார்டனை சேர்ந்தவர் அப்துல் காதர் ஜெய்லானி (73). இவர் தங்கிருந்த வீட்டின் கதவு திறக்கப்பட வில்லை. மேலும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் தல்லாகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கதவை உடைத்து பார்த்தபோது அங்கு அப்துல் காதர் ஜெய்லானி இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

 

The post பூட்டிய வீட்டில் முதியவர் சடலம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Abdul Qader Jailani ,Bharati Nagar Gokulam Garden, Madurai Krishnapuram Colony ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!