×

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் மாணவர் விடுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்

தூத்துக்குடி, மே 16: தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் மாணவர் விடுதிகளை சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். தூத்துக்குடி பீச் ரோட்டில் ₹2 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மற்றும் இனிகோ நகரில் ₹2 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து மாணவர் விடுதி, மீன் இறங்குதளத்தையும் அவர் பார்வையிட்டார்.
விழாவில் சப்-கலெக்டர் கவுரவ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் நாணயம், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோனிஸ்டாலின்,துணை அமைப்பாளர் சேசையா, மருத்துவ அணி அருண்குமார், கவுன்சிலர்கள் ரெக்சிலின், ராமகிருஷ்ணன், இனிகோ நகர் பங்குதந்தை ஜேசுராஜா, தாசில்தார்கள் தில்லைபாண்டியன், பிரபாகர், விடுதி காப்பாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து மேட்டூரில் ₹2 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இதையொட்டி விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் சண்முகையா எம்எல்ஏ, யூனியன் சேர்மன் ரமேஷ், பஞ்சாயத்து தலைவர் இளையராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். நிகழ்ச்சியில் தாட்கோ செயற்பொறியாளர் பால்ராஜ், தாசில்தார் சுரேஷ், பிடிஓ ராமராஜ், ஏபிடிஓ துரைராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், விடுதி காப்பாளர்கள் வேல்முருகன், சுரேஷ், முத்துசெல்வம், முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ராதேவி சண்முகராஜ், கனகரத்தினம் சுகுமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், கொடியங்குளம் பஞ். தலைவர் அருண்குமார், பாஞ்சாலங்குறிச்சி பஞ். முன்னாள் தலைவர் லதா கருணாநிதி மற்றும் ஞானதுரை, கருப்பசாமி, முருகன், ராஜாமணி, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் மாணவர் விடுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Ottapidaram, Thoothukudi ,Chief Minister ,M. K. Stalin ,Thoothukudi ,M.K.Stalin ,Ottappidaram, Tuticorin ,Chennai.… ,Ottappidaram ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...