×

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை உலக அரங்கிற்கு எடுத்து செல்ல திட்டம்: ஆதரவு கோரி சர்வதேச ஒலிம்பிக் வீரர்களுக்கு கடிதம்

புதுடெல்லி: மல்யுத்த வீரர்கள் தங்களது பிரச்சனையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டு, சர்வதேச ஒலிம்பிக் வீரர்களின் ஆதரவை நாடி உள்ளனர். பாஜ எம்பி.யும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ஏசியன் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகத் உள்பட மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23 நாட்களாக தர்ணா நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜகார்த்தாவில் நடந்த ஏசியன் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், “இந்த போராட்டத்தை உலக அரங்கிற்கு எடுத்து செல்வோம். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் உலக நாடுகளின் ஒலிம்பிக் வீரர்களை தொடர்பு கொள்வோம். அவர்களுக்கு கடிதம் எழுதி அவர்களது ஆதரவைக் கேட்போம்,” என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறிய போது, “எங்களது போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், போராட்ட முகாமில் உள்ள படுக்கைகளில் இரவு நேரங்களில் வேறு பெண்கள் வந்த தங்க முற்படுகின்றனர். அவர்கள் போட்டோ எடுக்கின்றனர். சொன்னாலும் கேட்பதில்லை,” எனக் கூறினார்.

The post மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை உலக அரங்கிற்கு எடுத்து செல்ல திட்டம்: ஆதரவு கோரி சர்வதேச ஒலிம்பிக் வீரர்களுக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Wrestlers ,international ,Olympic ,New Delhi ,International Olympic ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...