×

தமிழக பாஜ மேலிட பொறுப்பாளரான சி.டி.ரவியின் தோல்விக்கு ‘நாக்கு’ தான் காரணம்: காங்கிரசுக்கு ஆதரவாக வேலை செய்த மஜத வேட்பாளர்

சிக்கமகளூரு: தமிழக பாஜ மேலிட பொறுப்பாளரான சி.டி.ரவியின் தோல்விக்கு அவரது ‘நாக்கு’ தான் காரணம் என்று காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்த மஜத வேட்பாளர் போஜே கவுடா தெரிவித்தார். தமிழக பாஜவின் மேலிட பொறுப்பாளரும் பாஜ தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையாவை விட 5,926 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். இவரது தோல்விக்கு மூளையாக செயல்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் மூத்த தலைவரும், வேட்பாளருமான எஸ்.எல்.போஜே கவுடா தான் காரணம். இவர் தான் தோற்றாலும் பரவாயில்லை, சி.டி.ரவி ஜெயிக்க கூடாது என்று தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டார். அதற்காக காங்கிரஸ் வேட்பாளரின் ெவற்றிக்கு பல வகைகளில் உதவி செய்தார். தற்போது சி.டி.ரவி தோற்றதால் மகிழ்ச்சியடைந்த போஜே கவுடா, சிக்கமகளூரு நகரில் உள்ள ஹோசமானே கோயிலுக்கு பால்குடம் எடுத்து சாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதுகுறித்து போஜ கவுடா கூறுகையில், ‘சி.டி.ரவி மாநில அரசியலில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் வேகமாக வளர்ந்தார். அதற்கான யோகம் அவருக்கு கிடைத்தது.

மற்றவர்களை விமர்சனம் செய்வது தவறல்ல, அதற்கும் ஒரு எல்லை உண்டு. அரசியல் ரீதியாக மற்றவர்களை விமர்சிப்பது சரியானது என்றாலும், தனிப்பட்ட விமர்சனங்களை முன்னெடுப்பது சரியில்லை. சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் மற்ற தலைவர்கள் குறித்து தனிப்பட்ட விமர்சனங்களைச் செய்துள்ளார். மற்றவர்களை விமர்சனம் செய்யும் போது அவர்களின் ஆளுமை மற்றும் அரசியல் அர்ப்பணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவரை மகிழ்விப்பதற்காகவோ, கணநேர மகிழ்ச்சிக்காகவோ, கட்சியினரை மகிழ்விப்பதற்காகவோ தனிப்பட்ட விமர்சனங்களை செய்வது சரியல்ல. தேவகவுடாவை சபரகி ஹட்லி என்றும், சித்தராமையாவை சித்ரமுல்லா கான் என்றும் அழைத்தார். சி.டி.ரவியின் தோல்விக்கு அவரது நாக்குதான் காரணம். ஊழல், வன்கொடுமை, நாக்கு அனைத்தையும் ஒன்றாக தோற்கடித்துள்ளோம்’ என்றார்.

The post தமிழக பாஜ மேலிட பொறுப்பாளரான சி.டி.ரவியின் தோல்விக்கு ‘நாக்கு’ தான் காரணம்: காங்கிரசுக்கு ஆதரவாக வேலை செய்த மஜத வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : CM ,Tamil Nadu ,Malithaan ,Rawi ,Congress ,Chikkamagaluru ,Nadu ,T.C. ,
× RELATED தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல்