×
Saravana Stores

திருவள்ளூர்- திருப்பதி செல்லும் பாதையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு ஜி.கே.வாசன் கடிதம்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டையும், ஆந்திராவையும் இணைக்கும் நெடுஞ்சாலையாக என்எச்-205 விளங்குகிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி வழியாக செல்லும் சாலை 2013ம் ஆண்டிலிருந்து இருவழிப் பாதையாகவே விளங்கி வருகிறது. இந்த சாலையின் நடுவில் தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள், எதிர் நோக்கி வரும் வாகனங்களால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்பட மிகுந்த வாய்ப்புள்ளது. இந்த சாலை 32 கி.மீ., தூரம் மட்டுமே உள்ளது. இதை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தினால் பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறுவார்கள். வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பு கருதி, புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் நான்குவழிப் பாதையைப் போன்று திருவள்ளூரில் இருந்து திருப்பதி செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும். இதனால் பாதுகாப்பான பயணம் ஏற்படும். அதோடு பயண நேரமும் குறையும். எனவே நான்கு வழிப்பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருவள்ளூர்- திருப்பதி செல்லும் பாதையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு ஜி.கே.வாசன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur-Thirupati ,Union Minister ,G.P. K.K. Wassan ,Chennai ,Tamaga ,G. K.K. Vasan ,NH-205 ,Tamil Nadu ,Andhra Pradesh ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் மனோகர் லால், அமைச்சர்...