×

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு திமுக விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகள் நியமனம்

சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு, திமுக விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, திமுக விவசாயத் தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு திமுக விவசாயத் தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி தலைவராக மொ.கோ.மணி நியமிக்கப்படுகிறார். துணை தலைவராக ரா.குப்புசாமியும், அமைப்பாளராக அசோகனும் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் துணை அமைப்பாளர்களாக கிருஷ்ணன், வீரசாமி, ஆர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே.சசிக்குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு திமுக விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Manjagar Agricultural Workers ,Kanchipuram ,Southern ,District ,Chennai ,Kanchipuram Southern District ,Dizhagam Agricultural Workers ,Dizagam Agriculture Workers' Team ,Dishagar ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...