×

ரூ100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சங்ரூர் நீதிமன்றம் நோட்டீஸ்

சங்ரூர்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் பஜ்ரங் தளம், பிஎஃப்ஐ போன்ற அமைப்புகளைத் தடை செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாளில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பஜ்ரங் தளம் அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து சண்டிகர் விஎச்பியின் சட்டப்பிரிவின் இணைத் தலைவர் வழக்கறிஞர் சாஹில் பன்சால் என்பவர், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக ரூ. 100 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து அவதூறு வழக்கில் கார்கேவுக்கு சங்ரூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் ஜூலை 10ம் தேதி நீதிமன்றத்தில் கார்கே ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post ரூ100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சங்ரூர் நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Sangrur ,Mallikarjuna Kharge ,Karnataka assembly elections ,Bajrang Dal ,BFI ,
× RELATED ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது...