×

“உண்ணாவிரதம் இருந்தால் கடவுளை காணலாம்”!: கென்யாவில் வினோத வழிபாட்டில் பலியானோர் எண்ணிக்கை 201 ஆக அதிகரிப்பு..!!

கென்யா: கென்யாவில் உண்ணாவிரதம் இருந்தால் கடவுளை காணலாம் என்ற வினோத வழிபாட்டில் பலியானோர் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் பாதிரியார் பால் மெக்கன்சி என்பவர் பேச்சை கேட்டு கிராம மக்கள் கடவுளை காண வேண்டும் என்ற விருப்பத்தில் பல நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி இருந்திருக்கின்றனர். மெக்கன்சிக்கு சொந்தமான,800 ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது மெக்கன்சிக்கு சொந்தமான பண்ணையில் இருந்து மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த பட்டினி வழிபாட்டில் பலியானோர் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போனதாக கூறப்படுவதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post “உண்ணாவிரதம் இருந்தால் கடவுளை காணலாம்”!: கென்யாவில் வினோத வழிபாட்டில் பலியானோர் எண்ணிக்கை 201 ஆக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : God ,Kenya ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…