×

பிரசவத்திற்கு மனைவி சென்ற நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்

 

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே உள்ள நீலகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜூ (33), கூலித்தொழிலாளி. இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் அவரது மனைவி மீண்டும் கர்ப்பமானார். இதனால் அவர் பிரசவத்திற்காக தனது குழந்தையுடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றார். நாகராஜூ தனது கிராமத்திலேயே தங்கி வேலை செய்து வந்தார். அப்போது அவரது அண்ணன் மகளான 16 வயது சிறுமியை பள்ளிக்கு அடிக்கடி அழைத்து சென்று வந்தார். ஒருநாள் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றபிறகு சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இதை யாரிடமாவது கூறினால், உனது பெற்றோரை கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு நாகராஜூ சிறுமியை பலமுறை சீரழித்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த அவரது பெற்றோர் நேற்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில், சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அவர்களிடம் சிறுமி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள், நாகராஜூவை நேற்று பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி ைவத்து கட்டையால் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். நாகராஜூவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பிரசவத்திற்கு மனைவி சென்ற நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன் appeared first on Dinakaran.

Tags : Koduran ,Tirumalai ,Nagaraju ,Nilakunda ,Chittoor, Andhra State ,
× RELATED வீட்டை பூட்டி மருமகள் சாவியை...