×

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதம்

சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 61வது லீக் போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்களும், கான்வே 30 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய 4 விக்கெட் மட்டுமே இழந்து 18.3 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணி இந்த போட்டியில் தோற்றதால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்கத்தா அணி வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Nitish Rana ,Kolkata ,Chennai ,PTI ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...