×

ஆலங்குடி அருகே துவரங்கொல்லைப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

 

ஆலங்குடி: ஆலங்குடி அருகே துவரங்கொல்லைப்பட்டியில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன், சித்திவிநாயகர், முத்துமுனீஸ்வரர் உருமநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. இதில், 99 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை
போட்டிப்போட்டு அடக்கினர். இதில், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில், வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், வெள்ளி காசு, டைனிங் டேபில், மின்விசிறி, சில்வர் அண்டா, டிரசிங் டேபிள், குக்கர், ஹாட் பாக்ஸ், மின்சார அடுப்பு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டன. இதனை அப்பகுதியைச். சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வடமாடு ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

The post ஆலங்குடி அருகே துவரங்கொல்லைப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு appeared first on Dinakaran.

Tags : Dwaramadu ,Manchuvvadu ,Alangudi ,Pitariyamman ,Siddivinayagar ,Muthumuneswarar ,Urmanathar Temple ,Ikhoil ,Dharamadu ,Thurankollibar ,
× RELATED ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு;...