×

கொள்ளிடம் அருகே அளக்குடி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் நிறுத்தம்

 

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே அளக்குடி பகுதியில் கள்ளச்சாரய விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீசாரை கிராம மக்கள் பாராட்டி உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததால் சில தினங்களுக்கு முன்பு குற்ற சம்பவங்கள் நடந்து வந்ததாக நரியன் தெரு கிராம மக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். காரைக்காலிலிருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் அப்பகுதியில் உள்ள சிலரால் விற்பனை செய்ததால் அதனை வாங்கி பலர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. போலீசாருக்கு தெரியாமல் இங்கு சாராயம் விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அளக்குடி கிராமம் நரியன் தெருவை சேர்ந்த பெண் கள் மாவட்ட எஸ்பி நிஷாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் வீடுகளுக்கு அருகாமையில் காரைக்கால் மதுபானம் கிடைப்பதால் அதை வாங்கி குடிப்போர்களால் சமூகப் பிரச்சினைகள் நிறைய ஏற்படுகின்றன.பெண்களுக்கு இடையூராக பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாமல் கள்ளச்சாராய விற்பனையாளர்கள் தொடர்ந்து சமூக விரோதச் செயலை செய்து வருகிறார்கள். பல முறை கோரிக்கை வைத்தும் பலமுறை வழக்கு பதிவு செய்தும் தொடர்ந்து சாராய விற்பனை நடை பெற்று வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றோம். எனவே உடனடியாக முழுமையாக தகர்த்தும் பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் பெரியோர்கள் வாழ்வு மேம்பட மேன்மையான விழிப்புணர்வும் வழங்க கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவின் மீது மாவட்ட எஸ்பி நிஷா உடனடியாக நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து அளக்குடி பகுதியில் போலீசார் 3 நாள் முகாமிட்டு சாராய விற்பனையை முற்றிலும் அழித்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் சாராய விற்பனையை முற்றிலும் அழித்த மாவட்ட எஸ்பி நிஷாவுக்கு நன்றியை தெரிவித்ததுடன் நன்றி அறிவிப்பு கடிதத்தையும் மாவட்ட எஸ்பிக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

The post கொள்ளிடம் அருகே அளக்குடி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Alakudi ,Kollidam ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி...