×

புகழிமலை முருகன் கோயிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

 

வேலாயுதம்பாளையம்: புகழூர் நகராட்சி வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 48ம் நாள் மண்டல அபிஷேகம் நிறைவுவிழா காலை 8 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை நடைபெற்றது. 48ம் நாள் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அக்கணிகுண்டம் யாகசாலை அமைக்கப்பட்டது. 108 வலம்புரி சங்குகள் கோவியில் வளாகத்தில் வைக்கப்பட்டு சங்குகளில் புனித நீர்ஊற்றி அதில் புஷ்பங்கள் வைத்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் வேள்வி வழிபாடுகளுடன் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் அக்கினி குண்டத்தில் வேத மந்திரங்கள் ஓதினர். பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணி குழு தலைவரும், புகழூர் நகராட்சி தலைவருமான குணசேகரன், பொருளாளர் அண்ணா வேலு தலைமையிலான திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

The post புகழிமலை முருகன் கோயிலில் மண்டல அபிஷேகம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Pugazhimalai Murugan Temple ,Velayuthampalayam ,Pugazhimalai Balasubramania Swamy Temple ,Pugazhur Municipality ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே ஆற்று...