×

திடக்கழிவு மேலாண்மை ஆய்வு கூட்டம்

 

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தினசரி பெறப்படுகிற திடக்கழிவுகள் வீடு தோறும் 100 சதவீதம் முழுமையாக தூய்மை பணியாளர்களை கொண்டு சேகரிப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்கா குப்பைகளை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.

திடக்கழிவுகளை கையாள அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ள ஊராட்சிகளில் அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைந்து திடக்கழிவுகளை கையாள வேண்டும். அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இந்த மாத இறுதிக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் திடக்கழிவு மேலாண்மை நிலையை கையாளுவது குறித்து இசைவு சான்றிதழ் பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில், டிஆர்ஓ கண்ணன், மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திடக்கழிவு மேலாண்மை ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Solid Waste Management Review ,Karur ,District Collector ,District ,Prabhu Shankar ,Dinakaran ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...