×

கொள்ளை பணத்தில் கோடீஸ்வர வாழ்க்கை 77 வயதில் 200 வழக்கு, 250 முறை சிறை: கோடிக்கணக்கான மதிப்பில் பங்களா, வணிக வளாகம் வாங்கிய கில்லாடி முதியவர்

வேதாரண்யம்: தனது 77 வயதில் 200 வழக்கு, 250 முறை சிறை சென்ற முதியவர், கொள்ளை பணத்தில் பங்களாக்களும், வணிக வளாகங்களும் கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (37). 108 ஆம்புலன்ஸ் டெக்னீஷியன். இவரது சகோதரர் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 6ம் ேததி வெளியூர் சென்று விட்டு அன்றிரவு பிரகாஷ் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 6 பவுன் நகை, ரூ70 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடியை சேர்ந்த தங்கமுத்து (77) என்பவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

தங்கமுத்துவுக்கு ஒரு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர், நீண்டகாலமாக திருடுவதையே தொழிலாக கொண்டிருந்திருக்கிறார். இதனால் பல்வேறு இடங்களில் திருடிய நகை, பணத்தை கொண்டு தேனி, உடன்குடியில் பங்களாக்களும், வணிக வளாகமும் கட்டி சொகுசாக வாழ்ந்திருக்கிறார். திருமணமான 2 தங்கைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து காரைக்காலில் வீடுகள் கட்டிக் கொடுத்து உள்ளார். இவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 100 திருட்டு வழக்குகளும், தமிழகத்தில் மட்டும் 100 திருட்டு வழக்குகளு உள்ளதும், இதுபோன்ற திருட்டு வழக்குகளுக்காக இதுவரை 250 முறைக்கு மேல் சிறைக்கு சென்றதும் தெரிய வந்தது.

The post கொள்ளை பணத்தில் கோடீஸ்வர வாழ்க்கை 77 வயதில் 200 வழக்கு, 250 முறை சிறை: கோடிக்கணக்கான மதிப்பில் பங்களா, வணிக வளாகம் வாங்கிய கில்லாடி முதியவர் appeared first on Dinakaran.

Tags :
× RELATED 3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை,...