×

பெங்களூரு ஜெயநகர் தொகுதி முடிவு திடீர் மாற்றம் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் வெற்றி: காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு

பெங்களூரு: ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பாஜ வேட்பாளர் 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கர்நாடகா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது. நேற்று முன் தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டன. பாஜ வேட்பாளர் ராமமூர்த்தியை எதிர்த்து தற்போதைய எம்எல்ஏ சவுமியா ரெட்டி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டிருந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால், இறுதி முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார், மாநில செயல் தலைவரும், சவுமியா ரெட்டியின் தந்தையுமான ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா, முன்னாள் அமைச்சர் அசோக் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து வாக்கு எண்ணிக்கையை சரிபார்த்தனர். அப்போது, வாக்கு எண்ணும் அரங்கிற்குள் தேஜஸ்வி சூர்யாவை அதிகாரிகள் அனுமதித்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பின்னர், 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி கண்ணீர் விட்டார். பாஜ வேட்பாளர் ெவற்றி பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரசார் புகார் கூறினர்.

The post பெங்களூரு ஜெயநகர் தொகுதி முடிவு திடீர் மாற்றம் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் வெற்றி: காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru Jayanagar ,BJP ,Congress ,Bengaluru ,Jayanagar ,Karnataka Legislature… ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...