×

சமூக ஆர்வலரை தாக்கிய வழக்கு டெல்லி ஆளுநருக்கு சிக்கல்: விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

அகமதாபாத்: டெல்லி ஆளுநர் சக்சேனாவிற்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு எதிராக காந்தி ஆசிரமத்தில் நர்மதா பச்சாவோ அந்தோலன் ஆர்வலர் மேதா பர்கர் அமைதிக்கூட்டம் நடத்தினார். அப்போது அவரை. தற்போது டெல்லி ஆளுநராக இருக்கும் விகே சக்சேனா தாக்கியதாக கூறப்படுகின்றது. இது குறித்து விகே சக்சேனா மீது சமூக ஆர்வலர் மேதா பட்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆளுநர் சக்சேனாவிற்கு எதிராக கடந்த ஆண்டு முதல் விசாரணை நடந்து வருகின்றது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி ஆளுநர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை 8ம் தேதி விசாரித்த கூடுதல் தலைமை ஜூடிசியல் மேஜிஸ்திரேட் பிஎன் கோஸ்வாமி விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். “கடந்த 2005ம் ஆண்டு முதல் அதாவது சுமார் 18 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு எதிரான விசாரணைக்கும் தடை விதித்தால் வழக்கு மீண்டும் பல ஆண்டுகளுக்கு நிலுவையில் இருக்கும். இது நிலுவையில் இருக்கும் பழைய வழக்குகளின் எண்ணிக்கையை தான் அதிகரிக்கும். எனவே விசாரணைக்கு தடை விதிக்க முடியாது” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post சமூக ஆர்வலரை தாக்கிய வழக்கு டெல்லி ஆளுநருக்கு சிக்கல்: விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi Governor ,Ahmedabad ,Delhi ,Governor ,Sakchena ,Governor of ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...