- கர்நாடக
- கட்சியின் பொதுச் செயலாளர்
- டிசி
- தில்லி
- பொதுச் செயலாளர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- கட்சியின் பொதுச் செயலாளர்,
![]()
டெல்லி: பெருமுதலாளிகளுக்கு பாதுகாப்பாக இருந்த பாஜக ஆட்சி கர்நாடகாவில் அகற்றப்பட்டுள்ளது என்று டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பாஜக அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை கர்நாடக மக்கள் தங்கள் தீர்ப்பு மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். பாஜக ஏதோ ஒரு மாயையை இன்றைக்கு உருவாக்க முயன்றது. பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்ற மாயையை உருவாக்க முயன்றனர் என்றார்.
The post பெருமுதலாளிகளுக்கு பாதுகாப்பாக இருந்த பாஜக ஆட்சி கர்நாடகாவில் அகற்றப்பட்டுள்ளது: இந்திய கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி appeared first on Dinakaran.
