×

கர்நாடகத்தில் நடைபெற்ற மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

டெல்லி: கர்நாடகத்தில் நடைபெற்ற மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் யார் என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பிரதமர், உள்துறை அமைச்சர், அமைச்சர்கள் என பாஜக தனது அனைத்து பலங்களையும் பயன்படுத்திய போதும் மக்கள் ஏமாறவில்லை என தெரிவித்தார். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே உருக்கமாக பேசினார்.

The post கர்நாடகத்தில் நடைபெற்ற மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Malligarjune Karke ,Delhi ,All India Congress ,Malligarjun ,Mallikarjun Karke ,
× RELATED காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்...