×

கர்நாடகத்தில் ஆட்சியை பறிகொடுக்கிறது; பாஜக அமைச்சர்கள் தோல்வி முகம்: தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட பாஜ. ஆட்சி இல்லை

கர்நாடகா: கிட்டூர் கர்நாடக மண்டலத்தில் போட்டியிட்ட அமைச்சர்கள் கோவிந்த் கர்ஜு, முருகேஷ் நிரானி, சி.சி.பாட்டீல், சங்கர் பாட்டீல் ஆகியோர் பின்னடைவு அடைந்துள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபா கலா முன்னிலை பெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் அஸ்வின் சேம்பங்கியை விட 11,000 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. கொசகோட் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் எம்.டி.பி. நாகராஜ், கோதக் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ரமேஷ் ஜர்கி, நிபானி தொகுதியில் போட்டியிட்ட சசிகலா ஜோலி, சிக்கபல்லப் தொகுதியில் போட்டியிட்ட சுதாகர் ஆகியோர் பின்னடைவில் உள்ளனர். வருணா,சாம்ராஜ் நகர் தொகுதிகளில் போட்டியிட்ட அமைச்சர் சோமண்ணா, 2 தொகுதிகளிலும் பின்னடைவு கண்டுள்ளார்.

8 பாஜக அமைச்சர்கள் பின்னடைவு:

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 8 பாஜக அமைச்சர்களுக்கு பின்னடைவு . பாஜக அமைச்சர்கள் ஹாலப்பா ஆச்சார், சோமண்ணா, பி.சி. நாகேஷ், கே.சி.நாராயண கவுடா, பாஜக அமைச்சர்கள் முருகேஷ் நிரானி, பி.ஸ்ரீ ராமலு, டாக்டர் சுதாகர், கோவிந்த் கார்ஜோள் ஆகியோருக்கு பின்னடைவு கண்டுள்ளனர்.

கர்நாடகத்தில் 70 தொகுதிகளுக்கும் கீழே சென்றது பாஜக:

கர்நாடகத்தில் முன்னிலை நிலவரப்படி பாஜக 70 தொகுதிகளுக்கும் கிழே சென்றுள்ளது. 126 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் 68 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலை அடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 68 தொகுதிகளில் மட்டுமே பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும் பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

The post கர்நாடகத்தில் ஆட்சியை பறிகொடுக்கிறது; பாஜக அமைச்சர்கள் தோல்வி முகம்: தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட பாஜ. ஆட்சி இல்லை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,South India ,Ministers ,Gowynth Garju ,Murukesh Nirani ,C. RC Botteel ,Shankar Bhattil ,Baja ,
× RELATED பாலியல் துன்புறுத்தல் செய்ததாக...