×

பார்மஸி கல்லூரியில் தனித்துவம் பெற்ற தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மஸி

ஈரோடு வேப்பம்பாளையத்தில் தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மஸி கடந்த 1992ம் ஆண்டு ஈரோடு கல்வி அறக்கட்டளையால் துவங்கப்பட்டது. இந்த கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு நடத்தப்படும் இரண்டாண்டு பட்டயப்படிப்பான D.pharm, நான்காண்டு பட்டப்படிப்பான B.pharm, மேலும், இரண்டாண்டு முதுகலை பட்ட மேற்படிப்பான M.pharm (pharmaceutical analysis, pharamacology, pharamacy practice), ஆறு ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட மேற்பட்டிப்பான Pharm.D (Doctor pharmacy), முழுநேர(3ஆண்டு, 4 ஆண்டு) மருந்தியல் ஆராய்ச்சி படிப்பு ph.D ஆகியன செயல்பட்டு வருகிறது. இந்த படிப்புகள் அனைத்தும் AICTE, New Delhi மற்றும் DME-Tamilnadu Goverment ஆல் அங்கீகரிக்கப்பட்டவை.

இந்த கல்லூரியில் நவீனபடுத்தப்பட்ட வகுப்பறை, இணையதள வசதியுடன் கூடிய டிஜிட்டல் லைப்ரரி, கணினி ஆய்வகம், பாதுகாப்பிற்காக வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், நவீன கேண்டீன் வசதி, மத்திய அரசின் மலிவு விலை மருந்தகம், கேவிபி ஏடிஎம், ஜெராக்ஸ், நோட்டு புத்தக கடை, கலையரங்கம், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் ஆகியன மாணவர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், Institutional Animal Ethical committee-New delhi ஆல் அங்கீகரிக்கப்பட்ட விலங்குகள் ஆய்வகம் மருத்துவ ஆராய்சிக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், மருந்து தர நிர்ணயத்துறை, மருந்து ஆய்வாளர், HOSPITAL PHARMACY, கிளினிக்கல் பார்மஸி, மருந்து வணிகத்துறை, பன்னாட்ட மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்காக தனியாக வேலை வாய்ப்புத்துறை சிறப்பு செயல்பட்டு பல்வேறு வேலை வாய்ப்பினை பெற்று தந்து கொண்டிருக்கிறது.

சுற்றுவட்டார பகுதியில் இருந்து கல்வி பயில இங்கு வரும் மாணவர்களுக்கு கல்லூரி பஸ் வசதி உள்ளது. ஈரோடு பஸ் ஸ்டாண்ட், குமாராபாளையம், பவானி, லட்சுமி நகர், சித்தோடு, நசியனூர், பெருந்துறை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உடன் Pharm.D படிப்பிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கல்லூரியால் தனியாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் மருந்து தகவல் மற்றும் ஆலோசனை மையம் இலவசமாக சேவை மனபான்மையுடன் நோயாளிகளுக்கு மருந்து பற்றிய தகவல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

The post பார்மஸி கல்லூரியில் தனித்துவம் பெற்ற தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மஸி appeared first on Dinakaran.

Tags : Erode College of Pharmacy ,Vepampalayam ,Erode ,Erode Education Trust ,Dinakaran ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது