×

அம்பலமூலா பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா புதுப்பிக்கப்படுமா?

பந்தலூர், மே 13: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அனைவருக்கும் கல்வித்திட்டம் மூலம் செயல்படும் பழங்குடியினர் பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றது. அப்பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா தற்போது பராமரிப்பு இல்லாமல் பயனற்று இருந்து வருகிறது. பல லட்சம் செலவு செய்து பூங்கா அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு பயனில்லாமல் இருந்து வருவதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அம்பலமூலா பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா புதுப்பிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Ambalamula ,Bandalur ,Nelakottai ,Panchayat Ambalamula Government Secondary School and Government Primary Health Centre ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி...