×

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

ராமநாதபுரம், மே 13: ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமணை, முதுகுளத்தூர், கடலாடி அரசு மருத்துவமனைகள், சாயல்குடி, ஆப்பனு£ர், கீழத்தூவல், சிக்கல், ஏர்வாடி, தேரிருவேலி, உச்சிநத்தம், திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவமனைகளில் அலங்கரிக்கப்பட்ட நைட்டிங்கேல் அம்மையாரின் உருவ படத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலியர் விடுதியில் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலும் செவிலியர் சங்க செயலாளர் வீரம்மாள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் சரவணன், கடலாடி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் பாளேஸ்வரி, முதுகுளத்தூர் மருத்துவமனையில் தலைமை செவிலியர் சண்முகவள்ளி தலைமையில், செவிலியர் சங்க மாநில நிர்வாகி இளங்கோ ஆகியோர் முன்னிலையில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பிறகு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

The post அரசு மருத்துவமனைகளில் செவிலியர் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nurses Day ,Ramanathapuram ,Ramanathapuram Government Medical College Hospital ,Mudugulathur ,Cuddaly Government Hospitals ,Chayalkudi ,Appanur ,Keezhattuval ,Sikal ,Nurses Day Celebration in ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கு தயாராகும் உப்பளங்கள்