×

உச்ச நீதிமன்ற தீர்ப்பு டெல்லிக்கு மட்டும்தான்: ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி: ‘உச்ச நீதிமன்றம் தீர்ப்பு டெல்லிக்கு மட்டும்தான்’ என்று தமிழிசை தெரிவித்து உள்ளார். புதுவையில் நேற்று நடந்த கம்பன் விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு பின் ஆளுநர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது. டெல்லி அரசுக்கு வழிமுறை சொல்லியிருக்கிறார்கள். தலைநகர் என்பதால் அதற்கென்று தனி கருத்து உள்ளது. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் வெவ்வேறுதான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாமே மக்களுக்கானதுதான். நீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல முடியாது. கவர்னர்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை. அன்பால் தான் ஆள்கிறோம் என்றார்.

* தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதைதான் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இத்தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்துமா என்பதற்கு தீர்ப்பை படித்து பார்த்தால்தான் முழுமையாக தெரியும்’ என்றார். புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசைக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ‘அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடால் எதுவும் செய்ய முடிவதில்லை. மக்களுக்காக வகுக்கும் திட்டங்களை ஆளுநர் தமிழிசை நிறுத்தி வைக்கிறார்’ என்று முதல்வர் ரங்கசாமி கண்ணீர்விட்டார். உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பில் முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளதால் அவர் வரவேற்று உள்ளார்.

The post உச்ச நீதிமன்ற தீர்ப்பு டெல்லிக்கு மட்டும்தான்: ஆளுநர் தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Governor Tamilisai ,Puducherry ,Tamilisai ,Kampan ,Puduwai ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...