×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வீடியோ எடுத்த பக்தர் கைது

திருமலை: ஏழுமலையான் கோயிலில் ஆனந்த நிலையத்தை வீடியோ எடுத்த தெலங்கானா பக்தரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 7ம் தேதி இரவு 10.30 மணிக்கு பக்தர் ஒருவர் செல்போன் மறைத்து எடுத்து சென்று கோயிலுக்குள் ஆன்ந்த நிலையத்தை வீடியோ எடுத்துள்ளார். அந்த பக்தர் தெலங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த ராகுல் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நிருபர்களுக்கு செயல் அதிகாரி தர்மா பேட்டி அளித்தார். அதில் பேசியதாவது:

பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று பக்தர்களை துல்லியமாக சோதனை செய்யும் விதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வீடியோ எடுத்த பக்தர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupati Eyumalayan temple ,Thirumalai ,Ananda station ,Eyumalaiyan temple ,Tirupati Esumalayan Temple… ,Tirupati ,Esumalayan ,Temple ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...