×

கனிம வளங்களை கொண்டு சென்றதாக புகார்: புளியரை சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்படும் கனரக வாகனங்கள்..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடிக்கு வரும் அதிகனரக வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. புளியரை சோதனைச் சாவடி வழியாக அதிகனரக வாகனங்கள் கனிம வளங்களை கொண்டு சென்றதாக புகார் எழுந்தது. அதிகனரக வாகனங்களால் சாலைகள் பழுது, குடிநீர் குழாய் உடைப்பு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

The post கனிம வளங்களை கொண்டு சென்றதாக புகார்: புளியரை சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்படும் கனரக வாகனங்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Puliyara ,Tenkasi ,Puliarai ,Dinakaran ,
× RELATED குற்றால அருவிகளில் வெள்ளம்: எச்சரிக்கை கருவி அமைப்பு