×

திருப்பதியில் 2ம் நாளாக நடக்கும் திருவிழாவில் கெங்கை அம்மனுக்கு பாரம்பரிய சேலை சீர்வரிசை ஊர்வலம்

*மங்கள வாத்தியங்கள் முழங்க ஆணையாளர் எடுத்து சென்றார்

திருப்பதி : திருப்பதியில் 2ம் நாளாக நடக்கும் திருவிழாவில் கெங்கை அம்மனுக்கு பாரம்பரிய சேலை சீர்வரிசையை மங்கள வாத்தியங்கள் முழங்க ஆணையாளர் ஊர்வலமாக எடுத்துச்சென்றார். திருப்பதி கிராம தெய்வமான தாத்தையகுண்டா ெகங்கம்மா திருவிழாவில் இரண்டாம் நாளான நேற்று ெகங்கை அம்மனுக்கு திருப்பதி மாநகராட்சி ஆணையர் ஹரிதா மற்றும் அவரது குடும்பத்தார் பாரம்பரிய சேலை சீர்வரிசை வழங்கினர்.

திருப்பதி லீலாமஹால் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆணையாளர் வீட்டில் இருந்து பிரமாண்ட ஊர்வலமாக மாநகராட்சி ஆணையாளர் ஹரிதா தம்பதியினர் மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க வித்தியாசமான வேடமணிந்த கலைஞர்களுடன் லீலா மஹால் சாலை பழைய மாநகராட்சி சாலை பெரிய மார்க்கெட் வழியாக ெகங்கை அம்மன் கோயில் வந்தடைந்
தனர்.பின்னர் கெங்கை அம்மனுக்கு பாரம்பரிய பட்டு சேலை சமர்ப்பிக்கப்பட்டு, வண்ண மலர்களாலும், தங்கம் உடுத்தி, முகத்தில் சந்தனகாப்பு அலங்காரம் செய்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

2ம் நாளாக நடக்கும் திருவிழாவில் புலியாட்டம் ஆடினர். ஏராளமான பெண் பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றினர். அம்மன் வேடம் அணிந்து அரக்கனை வதம் செய்வதுபோல் தத்ரூபமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெண் பக்தர்கள் வேப்பிலை நடனம் ஆடினர். கோயிலில் திரளான பக்தர்களுக்கு அம்மனின் கூழ் மற்றும் அன்னாதானம் வழங்கப்பட்டது. 2வது நாளும் ஆந்திர மாநிலத்தில் கெங்கை அம்மன் திருவிழா களைக்கட்டியது. இன்று தொண்ட வேடம், தோட்டி வேடம் அணிந்து கோயிலுக்கு பக்தர்கள் செல்வார்கள்.

திருப்பதி மாநகராட்சி ஆணையர் ஹரிதா கூறியதாவது: கெங்கம்மா ஜாதராவில் குடும்ப பாரம்பரியமாக புடவை சாத்துவது தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும், பல ஆண்டுகளாக இருந்து வரும் பாரம்பரியத்தை தொடர்வதாகவும் தெரிவித்தார். திருப்பதி மாநகரில் பிறந்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கங்கம்மாவாக வேடமணிந்து திருவிழா கொண்டாடி வருகிறேன். இந்த ஆண்டு திருப்பதி மாநகராட்சி ஆணையராக திருப்பதி திருவிழாவில் பங்கேற்பது அம்மனின் அருள். திருப்பதி நகர மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ெகங்கம்மா திருவிழாவில் பங்கேற்று உள்ளனர் என்றார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ கருணாகரன், மேயர் சிரிஷா உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post திருப்பதியில் 2ம் நாளாக நடக்கும் திருவிழாவில் கெங்கை அம்மனுக்கு பாரம்பரிய சேலை சீர்வரிசை ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Goddess ,Kengai ,Tirupati ,festival ,Kenkai ,Kenkai Goddess ,
× RELATED அம்மையார்குப்பத்தில் திரவுபதி அம்மன்...