×

விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒற்றை சாளர இணையதளத்தை உருவாக்கி அரசு புதிய முயற்சி மேற்கொண்டு அரசாணை வெளியீடு

சென்னை: விவசாயிகளுக்கு அரசையும் இணைக்கும் ஒற்றை சாளர இணையதளத்தை உருவாக்கி அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் GRAINS என்றும் இயங்குதளத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. பயிர்கடன், கரும்புக்கான ஊக்கத்தொகை தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ஆதார், நில விவரம்,சாகுபடி உள்ளிட்டவைகளை சேகரித்து கணினிமயமாக்கி இணையதளம் உருவாக்கியுள்ளது. திட்டப்பயன்களை பெற திட்டப் பயன்களை பெற தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால் சிரமத்தை தவிர்க்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்ல] பயன்களும் (One Stop Solution) கிடைக்கும். இதன் மூலம், பயிர்க்கடன் நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கைப் பேரிடர் நிவாரணம் நலத்திட்ட உதவிகள், வேளாண்மை சார்ந்த க்கும் மேற்பட்ட 13 துறைகளின் பல்வேறு திட்டப் பலன்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இது விவசாயிகளுக்கும் அரசின் பல துறைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

வேளாண்மை – உழவர் நலத் துறையானது, 2010-2011 ஆம் ஆண்டு முதல் வேளாண்மையில் தகவல் தொழில் நுட்பத்தை உட்புகுத்தி விவசாயிகளுக்கான அனைத்து சேவைகளையும் இலகுவான முறையில் வழங்கி வருகிறது. மேலும், வேளாண்மைத் துறை மட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகள், விவசாயிகளின் வாழ்வு செழிக்க பல்வேறு சேவைகளை வழங்கி நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காத்து வருகிறது. தற்போதைய சூழலில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான சேவைகளை இந்த துறைகளில் இருந்து பெற, பெயர் முன்பதிவு செய்து துறைக்கு தேவையான ஆவணங்களை தனியே சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இந்த நடைமுறையானது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளதோடு திட்டப் பலன்களை பெறவும் கால விரயம் ஏற்படுகிறது.

இதற்குத் தீர்வு காணும் பொருட்டு, GRAINS” (Grower Online Registration of Agriculture Iaputs System) Portal- இயங்குதளம் உருவாக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக விவசாயிகளின் தரவுகளை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது. அதன் தொடர்ச்சியாக, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான சேவைகளை இந்த தரவுதளத்தில் பதிவு செய்துள்ள தகவல்களை வைத்தே பெற இயலும். அதோடு, அரசின் அனைத்துத் துறைகளும் சரியான பயனாளியை கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை துரிதமாக செயல்படுத்திட ஏதுவாக GRAINS இயங்குதளம் அமையும்

அரசின் நலத்திட்டங்கள் தகுதி வாய்ந்த பயனாளிக்கு சென்றடைவதை உறுதிபடுத்திட கீழ்க்காணும் மூன்று இனங்களும் இன்றியமையாதது ஆகும்.

* நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம்
* நில உடைமை வாரியாக புவியிடக் குறியீடு (Geo tagging) செய்தல்
* நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விவரம்

* நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம்:

GRAINS இயங்குதளத்தினை உருவாக்க, முதற்கட்டமாக நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் தரவுத்தளம் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

* நில உடைமை வாரியாக புவியிடக் குறியீடு (Geo Tagging) செய்தல்:

தமிழ்நாட்டில் உள்ள 16,721 கிராமங்களில் உள்ளஅனைத்து புல எண்களும் புவியிடக் குறியீடு செய்திட வழிவகை செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புவியிடக் குறியீடு செய்த புல எண்ணில், நிலம், நில உரிமையாளர் பற்றிய அனைத்து ளும் சேர்க்கப்பட்டு, ஒற்றைச் சாளர முறையில் ஒரே இடத்தில் கண்காணிக்க ஏதுவாக தரவுத்தளம் உருவாக்கப்பட உள்ளது

* நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விவரம்:

புவியிடக் குறியீடு செய்யப்பட்ட புல எண்ணில் சாகுபடி செய்துள்ள பயிர், பரப்பு விபரங்களை நிகழ்நிலை அடிப்படையில் பதிவு செய்திட செயலி ஒன்றை உருவாக்கி, நடப்புக் குறுவை பருவத்தில் செயலியை செயல்பாட்டுக்கு கொண்டு வர துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கூறிய மூன்று இனங்களின் தரவுகளையும் GRAINS இயங்குதளம் இணைத்து, தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு பலன்கள் சென்று சேர்வதை உறுதிசெய்கிறது. GRAINS என்பது விவசாயிகளின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி இயங்க உள்ளது. அதாவது விவசாயிகளின் தனிப்பட்ட விவரங்கள் (விவசாயியினுடைய பெயர், தந்தையார் பெயர், ஆதார் எண், கைபேசி எண் பாலினம், சமூக நிலை, இருப்பிட முகவரி), நில விவரங்கள் (புல எண், உட்பிரிவு எண், பரப்பு, நில முகவரி) வங்கி விவரங்கள் ஆகியவை கொண்டு இருக்கும்.

விவரங்களை கிராம வாரியாக சேகரித்து. கணினிமயமாக்கி புதிய இணையதளமான ‘GRAINS’ Portal (Grower Online Registration of Agriculture Inputs System) என்ற இயங்குதளத்தை 2023-2024 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்திடலாம் என அரசு கருதி, அவ்வாறே ஆணையிடுகிறது. நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம் அடிப்படையில் Grains (Grower Online Registration of Agricultural INput System) என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் Grains என்ற வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் அனைத்து துறைகளும் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், கூட்டுறவு துறை, விதை சான்றளிப்பு துறை, பட்டுவளர்ச்சிதுறை, வருவாய் துறை, உணவு வழங்கல் துறை, சர்க்கரை துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

The post விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒற்றை சாளர இணையதளத்தை உருவாக்கி அரசு புதிய முயற்சி மேற்கொண்டு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...