×

கஞ்சா விற்ற 6 பேர் கைது

ஊத்தங்கரை, மே 12: ஊத்தங்கரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்துசென்றனர். அப்போது ஊமையனூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வேடியப்பன் (48) என்பவரை கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், சிங்காரப்பேட்டை போலீசார் கீழ்மத்தூர் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றபோது, கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்(25) என்பவரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கல்லாவி போலீசார் சாலமரத்துப்பட்டியில் கஞ்சா விற்ற ஆனந்தன்(25), மோனிஷ்(23) ஆகியோரை கைது செய்து 40 கிராம் கஞ்சாவையும், சாமல்பட்டி போலீசார் படவனூர் பகுதியில் கஞ்சா விற்ற மோகன் (20), சேட்டு (19) ஆகியோரை கைது செய்து, 40 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Vediyappan ,Oomayanur ,Dinakaran ,
× RELATED வேலை வாங்கி தருவதாக மோசடி!: சென்னையில்...