×

மரக்காணம் அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது

மரக்காணம், மே 12: மரக்காணம் அருகே கழிக்குப்பம் மேட்டுத்தெரு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வைத்திருப்பதாக கோட்டக்குப்பத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு துறை அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் ஒருவர் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்துள்ளார். அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அந்த நபர் மரக்காணம் அருகே கந்தாடு பழைய தெருவை சேர்ந்த ரமேஷ் (46) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது இதுபோல் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வீடுகளில் வைத்திருக்கும் ரேஷன் அரிசிகளை விலை கொடுத்து வாங்கி வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ரமேஷை கைது செய்து, அவரிடம் கைப்பற்றிய ரேஷன் அரிசியை கோட்டக்குப்பம் எடுத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரக்காணம் அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,Ghazikuppam Metutheru ,Dinakaran ,
× RELATED மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்