×

பட்டிவீரன்பட்டியில் கூடைப்பந்து பயிற்சி முகாம்

பட்டிவீரன்பட்டி, மே 12: பட்டிவீரன்பட்டியில் என்எஸ்விவி பள்ளிகள் மற்றும் கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் இணைந்து நடத்தும் இலவச கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் துவக்க விழா நடைபெற்றது. இம்முகாமினை கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் நிறுவனர் மேகலா தேவராஜ் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் என்எஸ்விவி பள்ளிகளின் மேலாண்மை குழுத்தலைவர் முரளி, கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் நிர்வாக அதிகாரி விக்ரம் அர்ஜூன், என்.எஸ்.வி.வி.மெட்ரிக் பள்ளி தலைவர் கோபிநாத், செயலாளர் பிரசன்னா, பள்ளி முதல்வர் ஆத்தியப்பன், தலைமை பயிற்சியாளர் ஜான்சன் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாம் குறித்து அமைப்பாளர் செந்தில்குமார் கூறும்போது, மாணவ, மாணவிகளிடம் ஆரோக்கியம், நன்னடத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சமூக வலைத்தளங்களில் சிக்காமல் கூடைப்பந்தாட்ட அடிப்படைத்திறனை கற்று விடுமுறை நாட்களை நண்பர்களுடன் கூடி மகிழ்ச்சியாக கழிப்பதற்காகவும் இம்முகாம் நடத்தப்படுகின்றது. மே 25ம் தேதி வரை நடைபெற உள்ள இம்முகாமில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 6 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் சேரலாம். முகாமின் போது காலை உணவு மற்றும் முகாமினை நிறைவு செய்தவர்களுக்கு சீருடை, சான்றிதழ், கோப்பை வழங்கப்பட உள்ளன. கிராமபுற மாணவர்களிடம் கூடைப்பந்தாட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்க வைப்பதே இம்முகாமின் நோக்கம் என்றார். இம்முகாமில் சுமார் 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

The post பட்டிவீரன்பட்டியில் கூடைப்பந்து பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,NSVV Schools ,Solidan Technologies Coimbatore ,Training Camp ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் சங்க கூட்டம்