×

அத்தாணியில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அந்தியூர், மே 12: அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சியில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் தலைமை வகித்தார். பேரூர் கழகச் செயலாளர் செந்தில் கணேஷ் முன்னிலை வகித்தார். இதில், தலைமை கழகப் பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார்.

இதில், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எஸ்.பி ரமேஷ், அந்தியூர் பேரூர் கழகச் செயலாளர் எஸ்.கே.காளிதாஸ் துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகசுந்தரம், மலைக்காரா மணி, இளைஞர் அணி பேரூர் கழக அமைப்பாளர் பிரகாஷ், தொழில் நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அத்தாணியில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Athani ,Andhiyur ,Dinakaran ,
× RELATED திமுக ஆட்சி பொறுப்பேற்று 4ம் ஆண்டில்...